18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏடிஎம் இயந்திரத்தில் அவசரத்திற்கு பணம் எடுத்தால்.. நோட்டில் ஓட்டை..

ஏடிஎம் இயந்திரத்தில் அவசரத்திற்கு பணம் எடுத்தால்.. நோட்டில் ஓட்டை..

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2018, 11:04 am

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீ ராம புரத்தை சேர்ந்த வீர குமார் என்பவர் இன்று காலை வேடசந்தூர் கரூர் சாலையில் அமைந்துள்ள ஏடிஎம்மில் சுமார் 8000 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

அவர் எடுத்த பணத்தில் ஒரு ஐநூறு ரூபாய் கிழிந்து நடுவே பெரிய ஓட்டையும் இருந்துள்ளது, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீர குமார் ஏடிஎம்மில் எப்படி இது போன்ற நோட்டு நிரப்பப்படுகிறது? நிர்வாகம் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது, ஒரு அவசரத்திற்கு தான் பணம் எடுக்கிறோம், இது போன்ற பணம் வந்தால் என்ன செய்ய என கேள்வியை ஆச்சரியத்துடன் எழுப்பினார்.

வங்கியில் பணத்தை செலுத்தும் பொழுது சிறு கிழிசலோ, எழுத்தோ இருந்தால் ஆயிரம் கேள்வி கேட்கும் வங்கி ஊழியர்கள், அவர்களும் தாங்கள் செய்யும் பணியை சரியாக செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!