17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே ஆபத்தான நிலையில் பணி புரிந்த துப்புரவு தொழிலாளி, வேடிக்கை பார்த்த அரசு அதிகாரி .. வீடியோ..

மதுரை அருகே ஆபத்தான நிலையில் பணி புரிந்த துப்புரவு தொழிலாளி, வேடிக்கை பார்த்த அரசு அதிகாரி .. வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் October 1, 2018, 11:54 am

சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலை பசுமலை அரசு போக்குவரத்து கழகம் depot எதிரே கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டது. இதை பொக்லைன் எந்திரம் கொண்டு சரிசெய்யாமல் ஒரு மனிதரை எந்தவித பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் சுமார் 5 அடிக்கு மேல் உள்ள கழிவுநீர் செல்லும் பாதையில் அவரை இறக்கி விட்டு இரு அதிகாரிகள் மேல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது கழிவுநீரில் மனிதர்களை பயன்படுத்தக்கூடாது.

இதுபோன்ற செயல்களை மாநகராட்சி ஆணையாளர் எப்படி அனுமதித்தார் என்ற கேள்வி எழுகிறது மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?. இதுபோன்ற சம்பவங்கள் இனி தாக்கமும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி வி.காளமேகம், / ஜெ.அஸ்கர், மதுரை மாவட்டம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!