18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » முஹம்மது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி  கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் – 6ம் ஆண்டு துவக்க விழா..

முஹம்மது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி  கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் – 6ம் ஆண்டு துவக்க விழா..

எழுதியவர்: ஆசிரியர் September 26, 2018, 4:46 pm

இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி  கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் 6ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. யூத் ரெட் கிராஸ் அமைப்பின் 90 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட யூத் ரெட் கிராஸ் இணை அமைப்பாளர் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் வி.பி. ஆனந்த் முன்னிலையில் விழா நடைபெற்றது.  கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். சோமசுந்தரம் வரவேற்றார்.

இராமநாதபுரம் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன்ரெட் கிராஸ் அமைப்பின் தந்தை ஜீன் ஹென்றி டுனாண்ட் படத்தை முதல்வர் மற்றும் யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரிடம்  வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரெட் கிராஸ் துணைத் தலைவர் ஹாஜி அஸ்மாபாக் அன்வர்தீன் யூத் ரெட் கிராஸ் அடையாள அட்டையை வழங்கி சேவை மனப்பாண்மையை உருவாக்கும் ஆசிரிய மாணவர்களைப் பாராட்டி பேசினார்.

பொருளாளர் சி. குணசேகரன் கடந்த ஆண்டு யூத் ரெட் கிராஸ் உறுப்பினர்களின் சேவையை பாராட்டி வாழ்த்திப் பேசினர்.  ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ரெட் கிராஸ் வரலாறு, கொள்கைகள், நோக்கம், மற்றும் கட்டமைப்பு முறை, ஆகியவை பற்றி பவர் பாயிண்ட் மூலம் விவரித்தார்.

கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜி.ஆர். வடிவேல் நன்றியுரையாற்றினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!