17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி..

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி..

எழுதியவர்: ஆசிரியர் September 25, 2018, 12:46 pm

இராமநாதபுரம் சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நிதி ஆதரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதி மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 41 குழந்தைகளுக்கு ரூ.9.84 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், குழந்தைகள் நலக்குழு தலைவர் சகுந்தலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு அலுவலர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!