17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின்னல் தாக்கி விவசாய பெண் உயிரிழப்பு..

மின்னல் தாக்கி விவசாய பெண் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் September 24, 2018, 5:50 pm

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டாரத்தில் சத்திரக்குடி, வளநாடு பூவிளத்தூர் பகுதிகளில் இன்று மதியம் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் அப்பகுதியில் பெய்த மழையையை தொடர்ந்து விவசாய பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.

பூவிளத்தூர் கிராமத்தில் வயலில் மிளகாய் விதை தூவும் பணியில் சாத்தையா மனைவி வாசுகி (35) ஈடுபட்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!