17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி..

ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் September 24, 2018, 1:27 pm

ஹமீதியா ஆண்கள் மேல் நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி முள்ளுவாடி கிராமத்தில் நடைப்பெற்றது.

நாட்டு நலப்பணி திட்டத்தின் பொன்விழா ஆண்டு தினத்தை(செப்.24) முன்னிட்டு ஹமீதியா பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜவஹர் பாருக் தலைமையில் முள்ளுவாடி கிராமத்தில் நடைப்பெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பசீர் ஒருங்கிணைக்க மாணவர்கள் மக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினர்.

அதைத் தொடர்ந்து தொடர்ந்து மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித் திட்டம் உருவான வரலாறு பற்றி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பசீர் சிறப்புரையாற்றினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!