18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ஹமீதியா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் பொன்விழா ஆண்டு சிறப்பு முகாம் நடைபெற்றது…

கீழக்கரை ஹமீதியா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் பொன்விழா ஆண்டு சிறப்பு முகாம் நடைபெற்றது…

எழுதியவர்: Mohamed September 23, 2018, 3:26 pm

கீழக்கரை ஹமீதியா மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் பொன்விழா ஆண்டு சிறப்பு முகாம் துவக்க விழா முள்ளுவாடி கிராமத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கிராமத் தலைவர் முருகேந்திரன் தலைமை தாங்கினார்.

தலைமை ஆசிரியர் ஜவஹர் பாருக் மற்றும் திருப்புல்லாணி ஒன்றிய தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் தக்களை பீர்முகம்மது முன்னிலை வகித்தார்கள். விழாவில் கிராம நிர்வாக உறுப்பினர்கள் லிங்க சாமி, மகாலிங்கம், சிவனாண்டி, முருகேசன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இவ்விழா ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பசீர் மற்றும் துணை அலுவலர் பாரதி தாசன் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!