18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மது மற்றும் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்..

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மது மற்றும் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்..

எழுதியவர்: ஆசிரியர் September 23, 2018, 12:43 am

கீழக்கரையில் 22/09/2018 அன்று காலை 7 மணி முதல் கீழக்கரையின் முக்கிய பகுதியாக விளங்கும் V.S சாலையில் தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு கிளை நிர்வாகிகள் மது மற்றும் புகைக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

ஒவ்வொரு நபர்களையும் தனி தனியாக சந்தித்து. மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும். புகையினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. மக்கள் பார்வைக்கு ஒரு புறம் புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த பேனர் மற்றொரு புறம் மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

புகை மற்றும் மது அருந்துவதை தவிர்க்க ஆலோசனை வழங்கியதுடன் புகை மற்றும் மதுவிற்கு எதிரான நோட்டீஸ்வுடன் நிகோடின் (புகை தவிர்ப்பு ) மாத்திரை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வு  தமிழ்நாடு ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு) மாவட்டம் கீழக்கரை தெற்கு கிளையின் சார்பில் மக்தப் மதரஸா மாணவர்களுக்கு “புகை நமக்கு பகை” என்பதை விளக்கும் வகையில் புதிய முயற்ச்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!