17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » விளையாட்டின் போது கபடி வீரர் திடீர் மரணம்..

விளையாட்டின் போது கபடி வீரர் திடீர் மரணம்..

எழுதியவர்: ஆசிரியர் September 23, 2018, 12:17 am

இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகே வெண்குளம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக கபடி போட்டி நடந்து வருகிறது.

இன்று (22/09/2018) மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் வெண்குளம், இராமநாதபுரம் பெரியார் நகர் அணிகள் மோதின. அப்பொழுது வெண்குளம் அணியில் விளையாடி கொண்டிருந்த கடலூர் அருகே காட்டு கூடலூர் அருணாசலம் மகன் சூர்யா, 21. திடீரென மயங்கி விழுந்தார்.

அவரை சக வீரர்கள் துரிதமாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். சோதனையில் அவர் இறந்து விட்டதாக தெரிந்தது. உத்தரகோசமங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!