17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பயணியை தரக்குறைவாக நடத்திய அரசு பேருந்து நடத்துனர்..

பயணியை தரக்குறைவாக நடத்திய அரசு பேருந்து நடத்துனர்..

எழுதியவர்: ஆசிரியர் September 22, 2018, 2:15 am

இன்று (21/09/2018)  மாலை 6.50  சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த பயணிகளை தரக்குறைவாக நடத்தி நடத்துனர் ஊத்தங்கரையிலிருந்து மேல்செங்கம் சென்றுள்ளார். அதற்காக அப்பயணி டிக்கெட் எடுக்க நடத்துனரிடம் கேட்டபோது சில்லறை ₹.16 கேட்டுள்ளார்.

ஆனால்  பயணியிடம் சில்லரை இல்லாததால் ₹.100 நோட்டு கொடுத்துள்ளார். ஆனால் நடத்துனர் சில்லறை ₹.16 கேட்டுள்ளார். ஆனால் பயணி தன்னிடம் பதினான்கு மட்டுமே சில்லறை உள்ளது என்று 100 ரூ நோட்டு கொடுத்துள்ளார். இதை கேட்காத நடத்துனர் தன்னிடம் சில்லறை இல்லை நீ சிங்காரபேட்டையில் இறங்கி கொள் என்று தரக்குறைவாக கூறியுள்ளார்.  மேலும் நடத்துனர் தன் டிப்போ மேலாளர் சில்லறை கொடுப்பதில்லை அதனால் பயணிகள் தான் பேருந்தில் பயணம் செய்யும் போது சில்லறை எடுத்து வரனும் என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது பொதுவான கேள்வி இது போன்ற நடத்துனரிடம் சில்லறை கொடுத்து அனுப்பாத போக்குவரத்து மேலாளர் மற்றும் பயணிகளை அவமதிக்கும் நடத்துனர் பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தி:-பிரகாசம், கலாம் டி வி நியூஸ்

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ் ) கீழை நியூஸ்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!