17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » TNROA-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில மையம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்…

TNROA-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில மையம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்…

எழுதியவர்: ஆசிரியர் September 22, 2018, 2:04 am

TNROA-தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில மையம் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 26-09-2018 புதன் கிழமை அன்று எழிலகம் வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வருவாய்த் துறையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பணித்தன்மைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும், தேர்தல், பேரிடர் மேலாண்மை பணிகளுக்கு சிறப்பு பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களின் பதவி உயர்வினை உரிய காலத்தில் வழங்கிடவேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தனி விதி தொகுதி ஏற்படுத்திட வேண்டும் போன்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ளது.

செய்தி: அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் ( பூதக்கண்ணாடி மாத இதழ்)- கீழை நியூஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!