17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுவுக்கும், அரசுக்கும் எதிராக போராடும் நந்தினி மீது தொடரும் அடக்குமுறை..வீடியோ..

மதுவுக்கும், அரசுக்கும் எதிராக போராடும் நந்தினி மீது தொடரும் அடக்குமுறை..வீடியோ..

எழுதியவர்: ஆசிரியர் September 21, 2018, 7:30 am

விருதுநகரில் மதுவுக்கும், மோடிக்கும் எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் நந்தினிக்கும் – பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நந்தினி மற்றும் அவரது தந்தை இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் மதுவுக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர் நந்தினி விருதுநகரில் காமராஜர் நடுநிலைப்பள்ளி அருகில் குடி வீட்டுக்கு கேடு, மோடி நாட்டுக்கு கேடு என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இயற்கை வழி மனிதநேய இயக்க ஒருங்கிணைப்பாளரான நந்தினி பதாகைகளை ஏந்தி துண்டு பிரச்சாரத்தில் ஈடுபடும்போது பாஜகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி பாஜகவினர் பதாகைகளை பிடுங்கினர். இதனால் அதிருப்தியடைந்த நந்தினி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் இருவரையும் கைது செய்தனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!