17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது பாட்டில்கள் பதுக்கிய வாலிபர் கைது..

மது பாட்டில்கள் பதுக்கிய வாலிபர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் September 21, 2018, 6:59 am

இராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து கேணிக்கரை போலீசார் வாலாந்தரவை பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது மது பாட்டில் விற்றுக் கொண்டிருந்த வாலிபர் சிக்கினார். பின்னர் விசாரணையில், அவர் வாலாந்தரவை கிழக்கு தெரு ஆறுமுகம் மகன் ராஜூ, 25 என தெரிந்தது. அதைத் தொடர்ந்து ராஜூவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!