17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் இளைஞர் மன்றங்களுக்கு மத்தியிலான விளையாட்டு போட்டி..

இராமநாதபுரத்தில் இளைஞர் மன்றங்களுக்கு மத்தியிலான விளையாட்டு போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் September 20, 2018, 10:56 pm

இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேருயுவகேந்திரா இராமநாதபுரம் மற்றும் சாத்தாங்குடி விடுதலை தந்தை நேதாஜி இளைஞர் நற்பனி மன்றம் இனைந்து வட்டார அளவிளான இளைஞர் மன்றங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளை கீழச்செல்வனூரில் நடத்தியது.  இவ்விழாவுக்கு நேருயுவகேந்திரா சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இயக்குனர் சடாச்சரவேல் தலைமை தாங்கினார், கடலாடி வட்டார புள்ளியல் ஆய்வாளர் முருக பூபதி முன்னிலை வகித்தார்.

மேலக்கிடாரம் அக்னி சிறகுகள் இளைஞர் மன்றத்தலைவர் த.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார் இதில் பத்துக்கு மேற்பட்ட மன்றங்கள் கலந்து கொன்டது விளையாட்டு போட்டிகளை கடலாடி துனை வட்டாட்சியர் செந்தில்வேல் முருகன் தொடங்கிவைத்தார்.

கபடி போட்டியில் சாத்தாங்குடி விடுதலை தந்தை நேதாஜி இளைஞர் நற்பனி மன்றம் முதலிடத்தையும், மேலக்கிடாரம் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பனி மன்றம் இரன்டாம் இடத்தையும் பெற்றது வாலிபால் போட்டியில் கிழச்செல்வனூர் பைவ் ஸ்டார் வாலிபால் கிளப் முதலிடத்தையும் காவாகுளம் விவேகானந்தர் இளைஞர் மன்றத்தினர் இரன்டாம் பரிசையும் பெற்றனர் மற்றும் நூறு  மீட்டர் ஒட்டப்பந்தயம், குன்டு எரிதல், நீளம் தான்டுதல் ஆகிய போட்டிகளில் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கீழச்செல்வனூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சித்ரா தேவி கீழச்செல்வனூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துனைமேலாளர் சிமன்ஸ் மற்றும் கீழச்செல்வனூர் கிராம நிர்வாக அலுவலர் மனிகன்டன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர் தேசிய சேவைத்தொன்டர் மூக்கம்மாள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!