18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் பெரிய கண்மாய் வந்த வைகை தண்ணீர்.. மக்கள் மகிழ்ச்சி..

இராமநாதபுரம் பெரிய கண்மாய் வந்த வைகை தண்ணீர்.. மக்கள் மகிழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் September 20, 2018, 10:47 pm

 வைகை அணையில்  இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி உத்தரவுபடி, வைகை அணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குடிநீர் தேவைக்காக கடந்த 10ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. செப்டம்பர்16ம் தேதி பார்த்திபனூர் மதகணைக்கு வந்த தண்ணீரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மலர் தூவி வரவேற்றார்.

இதன் பின்னர் மதகணையில் இருந்து இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீரானது இராமநாதபுரம் அருகே காருகுடி மதகிற்கு இன்று வந்தடைந்தது. இதனையடுத்து அங்கிருந்து பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெரிய கண்மாய்க்கு தண்ணீர் வந்ததால் ராமநாதபுரம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!