17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் September 19, 2018, 8:51 pm

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் துணை இயக்குனர் நல பணிகள் அலுவலக வளாகத்தில் இன்று (செப்.19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பொன்னம்பலம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், பொது சுகாதாரக் துறை இணை செயலாளர் சுகவனம் சங்க விரோத போக்கை கண்டித்தும், பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன் மீதான குற்றக்குறிப்பாணை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் சண்முகநாத துரை, நகர் செயலர் வீரபத்திரன், இராமேஸ்வரம் வட்டக்கிளை செயலர் பஸானியோ உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவாக  வீரப்பெருமாள் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!