17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி..

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் September 18, 2018, 3:47 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ஆக்கிடா வலசை ஆரம்பப் பள்ளியில் ஊட்டசத்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் கோமகன் தலைமை வகித்தார். மாணவர்கள் பங்கேற்ற பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஆசிரியர் திரு மேனி நாயகம், சத்துணவு தங்கம், அங்கன்வாடி அமைப்பாளர் ராதா, பெற்றோர் ஆசிரியர் கழக ஆசிரியை திவ்யா மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீரனூர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற தாய்ப்பால் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தாய்மார்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தாயப்பால் கொடுப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை மாணவர் கள் கைகளில் ஏந்தியவாறு கோஷம் மிட்டு் பேரணியாக சென்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!