18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தில்  கனமழை..

இராமநாதபுரம் சுற்றுவட்டாரத்தில்  கனமழை..

எழுதியவர்: ஆசிரியர் September 17, 2018, 9:13 pm

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர், மஞ்சூர், தபால் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கன மழை பெய்தது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்தது.

இந்நிலையில் இன்று மதியம் போகலூர் வட்டாரம் சத்திரக்குடி மஞ்சூர் கீழக்கோட்டை, தபால் சாவடி, பாண்டிக்கண்மாய் பகுதிகளில் மேகம் திரண்டு இடி மின்னலுடன் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இப்பகுதிகளில் மானாவாரி நெல் சாகுபடி துவங்கி உள்ளதால் நெல்மணிகள் முளைப்பதற்கு இம்மழை உதவும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!