17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம்…

இராமநாதபுரத்தில் இலவச மருத்துவ முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் September 17, 2018, 12:34 am

இராமநாதபுரம் ரோட்டரி கிளப், ராமநாதபுரம் வேல் மருத்துவமனை சார்பில் மூளை நரம்பியல் இலவச சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம் வேல் மருத்துவமனையில் 16.9.18 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் காந்தி துவக்கி வைத்தார். ரோட்டரி சங்க செயலாளா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார்.

முகாமில் கழுத்து, இடுப்பு, நரம்பு, பக்கவாதம், வலிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கு டாக்டர் மலையரசு இலவச ஆலோசனை வழங்கினார். சத்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. நடுத்தர மக்கள் நலன் கருதி மாதத்திற்கொரு முறை இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்த திட்டமிள்ளதாக டாக்டர் மலை அரசு கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!