17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலி…

மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலி…

எழுதியவர்: ஆசிரியர் September 17, 2018, 12:20 am

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் கிராமத்தில் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி முதல் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி,கோவில்பட்டி மருத்துவமனைகளில் 60க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தனம் இன்று காலை மரணமடைந்தார். இதனால் அப்பகுதி மக்கள் கூடுதல் அச்சத்தில் உள்ளனர். ஒரு மாத காலமாக கொசு ஒழிப்பு பணிகளை செய்யும் சுகாதாரத் துறை மர்ம காய்ச்சலுக்கு விடை தெரியாமல், மக்களைக் காக்க இயலாமல் தவித்து வருகிறது. உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுத்திட, மர்ம காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும்,தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்களின் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

செய்தி:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் (பூதக்கண்ணாடி மாத இதழ் ) கீழை நியூஸ்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!