18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது…

மண்டபத்தில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது…

எழுதியவர்: ஆசிரியர் September 17, 2018, 12:12 am

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அர் ரஹ்மான் நிறுவன அறக்கட்டளை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில்  பொது மருத்துவம், கண் பரிசோதனை முகாம் இன்று (16.9.2018) காலை 10:00 மணி முதல் நண்பகல் 2:00 மணி வரை பேரூராட்சி மகாலில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு அர்-ரஹ்மான் மர்கஸ் தலைவர ஏ. ரல்பா கான் தலைமை வகித்தார். ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் எம். மகேஷ் தொடங்கி வைத்தார். மண்டபம் காவல் சார்பு ஆய்வாளர் அந்தோணி சகாயசேகர் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்.

முகாமில் 220 பேருக்கு ரத்தம், சிறுநீர், கண், ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. சர்க்கரை நோய் கண்டறிந்து மருத்துவ குழுவினர் ஆலோசனை வழங்கினர். 10 க்கும் மேற்ப்பட்டோர் இலவச கண் அறுவை சிகிச்சைக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.

முகாமில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு குரான் தமிழாக்க புத்தகம் வழங்கினர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!