18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » முகைதீனியா பள்ளி மாணவர்கள் சார்பாக வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்யப்பட்ட தொகை நாசா அமைப்பினரிடம் வழங்கப்பட்டது..

முகைதீனியா பள்ளி மாணவர்கள் சார்பாக வெள்ள நிவாரணத்திற்காக வசூல் செய்யப்பட்ட தொகை நாசா அமைப்பினரிடம் வழங்கப்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2018, 8:53 pm

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் கீழக்கரையில் உள்ள பல பள்ளி கூடங்கள், சமூக அமைப்புக்கள் பொருட்களும், பொருளாதார உதவிகளும் செய்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளி மாணவர்கள் இந்திய ரூபாய்.43,610/- வசூல் செய்திருந்தனர்.  அத்தொகையை வடக்குத் தெரு சமூக நல அமைப்பான NASA அமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர்.  ஏற்கனவே இந்த அமைப்பு சார்பாக இந்திய ரூபாய்.1,53,360/- வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கேரள நிவாரணத்திற்காக வசூல் செய்யப்பட்ட தொகையை நாசா அமைப்பினர் நேரடியாக கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று வழங்க உள்ளார்கள்.

 
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!