18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் மகாகவி பாரதி விழா..

தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் மகாகவி பாரதி விழா..

எழுதியவர்: ஆசிரியர் September 15, 2018, 4:23 pm

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று (15/09/2018) காலை 10.00 மணியளவில் தமிழ்துறையின் சார்பாக மகாகவி பாரதி விழா கல்லூரி கலையரங்க கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கமாக தமிழ்துறையின் தலைவர் வே.அகிலா வரவேற்புரையாற்றினார்.  கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா தலைமையுரை வழங்கினார்.  இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியர் முனைவர் கிருங்கை சேதுபதி “பாரதி கண்ட இளைய சமுதாயம்” என்ற தலைப்பில் இன்றைய தலைமுறையினரை ஊக்கவிக்கும் விதமாக சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கலைமாமணி பேராசிரியர் முனைவர் அரிமளம் பத்மநாபன் பாரதி கண்ட புதுமை பெண் என்ற தலைப்பில் பெண் கல்வி, பெண் விடுதலை பற்றி பாரதியார் பாடல் வாயிலாக இசையுடன் உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியின் இறுதியாக தமிழ்த்துறை  உதவிப் பேராசிரியை விசாலாட்சி நன்றியுரை மற்றும் நாட்டைப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!