17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ’12 குழந்தைகள்’ இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போலோ அனுப்பப்பட்டனர் – ரோட்டரி சங்கத்தின் முயற்சிக்கு நன்றி

’12 குழந்தைகள்’ இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போலோ அனுப்பப்பட்டனர் – ரோட்டரி சங்கத்தின் முயற்சிக்கு நன்றி

எழுதியவர்: keelai February 25, 2017, 1:02 pm

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் கடந்த வாரம் நாடார் பேட்டை மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது. இந்த முகாமில் கீழக்கரை உள்பட இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.

இதில் கீழக்கரை, திருவாடானை, தேவிபட்டினம், R .S மங்களம், R . காவனூர், உச்சிப்புளி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த 12 குழந்தைகள் இலவச இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சிறப்பான சேவையை செய்த கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் தொண்டுள்ளம் கொண்ட நல்லுள்ளங்களுக்கும், சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் கீழை நியூஸ் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!