17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம், கீழக்கரை உட்பட பல பகுதிகளில் பந்த் ஆதரவு…

இராமநாதபுரம், கீழக்கரை உட்பட பல பகுதிகளில் பந்த் ஆதரவு…

எழுதியவர்: ஆசிரியர் September 10, 2018, 11:53 am

டீசல், பெட்ரோல், காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தத் கோரி காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று (செப் 10 பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.

எதிர்கட்சிகளின் போராட்டத்திற்கு இராமேஸ்வரம், பாம்பன் மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி. உள்பட கடல் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ,மீன்பிடி தொழில் சார்பு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து இன்று கடலுக்குச் செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

வேலை நிறுத்தம் தொடர்பாக  இராமநாதபுரத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் அமைதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காங்., மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், திமுக மாவட்ட செயலர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், காங்,, நகர் தலைவர் கோபி, திமுக நகர் செயலர் கார்மேகம் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!