18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற ஒழுக்கநெறிகள் குறித்த தெருமுனை பிரச்சாரம்

இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற ஒழுக்கநெறிகள் குறித்த தெருமுனை பிரச்சாரம்

எழுதியவர்: keelai February 24, 2017, 11:24 pm

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் சிறப்பாக இயங்கி வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் சார்பாக, பொதுமக்களுக்கான அழகிய வாழ்வியல் வழிமுறைகளுக்கான தெருமுனை பிரச்சாரம் மாதமிருமுறை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இன்று 24.02.17 இரவு 8.30 மணியளவில் ‘நல் வார்த்தை பேசுங்கள்’ என்கிற அழகிய தலைப்பின் கீழ் சேரான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் அந்த தெருவை சார்ந்த ஏராளமான மாணவ மாணவியரும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பான பிரச்சாரத்தை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் தலைவர். சட்டப் போராளி தவ்ஹீத் ஜமாலி தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.

இந்த பிரச்சார நிகழ்வுகளை சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி ஹமீது சல்மான்கான், சட்டப் போராளிகள் அஸ்பாக், காதர் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். பிரச்சாரத்தின் முடிவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!