17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானலில் சுற்றுலாத்துறைச் சார்பாக சைல்டு லைன் அமைப்பும் அனைத்து ஊடக பத்திரிக்கையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது….வீடியோ செய்தி..

கொடைக்கானலில் சுற்றுலாத்துறைச் சார்பாக சைல்டு லைன் அமைப்பும் அனைத்து ஊடக பத்திரிக்கையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது….வீடியோ செய்தி..

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2018, 10:51 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாவட்ட சுற்றுலாத்துறைச் சார்பாக சைல்டு லைன் அமைப்பு மற்றும் அனைத்து ஊடக பத்திரிக்கையாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் கொடைக்கானல் சைல்டு லைன் துணை மைய இயக்குநர் ராஜாமுகமது வரவேற்புரை வழங்கினார் பின் சென்னை மாநில ஒருங்கிணைப்பாளர் வில்லியம் விரிவுரை வழங்கினார்.

இதில் கொடைக்கானல் சுற்றுலா தளம் ஆகையால் ஊடக பத்திரிக்கையாளர்களின் தங்கள் கருத்துக்களை இப்போது தெரிவிக்கலாம் என்றார் பின்பு ஊடக பத்திரிக்கையாளர்கள் தங்களின் பலதரப்பட்ட கருத்துக்களை கூறினார் இதில் முதல் கட்டமாக இளம் வயது திருமணம், குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவு, குழந்தை தொழிலாளர் முறை, குழந்தைக் கடத்தல், இது போன்ற பல கருத்துக்களை ஊடகவியலாளர்கள் தாங்கள் தான் செய்தி ஒளிபரப்பு செய்து இது போன்ற குற்றங்களைத் தடுக்க உதவவேண்டும் என்று கூறினார் பின்பு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாவட்டச் சுற்றுலாத்துறை அலுவலர் உமாதேவி உதவிச் சுற்றுலா அலுவலர் ஆனந்தன் ஆகியோர் செய்தியாளர்களின் கருத்தை முன்வைத்து அனைத்துச் சுற்றுலா இடங்களிலும் விழிப்புணர்வு பதாதைகள் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் அனைத்து ஊடக பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

கொடைக்கானல்: ரஜினி. ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!