18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்புல்லாணி அருகே கோயில் திருவிழாவில் ஆடுகள் பலியிட்டு நள்ளிரவு வழிபாடு…

திருப்புல்லாணி அருகே கோயில் திருவிழாவில் ஆடுகள் பலியிட்டு நள்ளிரவு வழிபாடு…

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2018, 2:38 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடை வினைதீர்த்த அம்மன் கோயில் உள்ளது.  இக்கோயிலின் குல தெய்வக்காரர்கள் ஒன்று கூடி ஒவ்வொரு ஆவணி மாதமும் வழிபடுவது வழக்கம்.

இதன்படி நேற்று (07.9.2018) இரவு நடந்த விழாவில் பொங்கல் வைத்தும் முடி காணிக்கை செலுத்தியும் 100 க்கும் மேற்ப்பட்ட ஆடுகள் பலியிட்டு வினை தீர்த்த அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் சாமியாட்டம் விடிய விடிய நடைபெற்றது. வெளிநாடுகள் மற்றும் அந்தமான் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து வழிபட்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!