17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

தேசிய பசுமைப்படை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2018, 1:14 pm

இராமநாதபுரம் கல்வி மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஒன்றியம். உப்பூர். ஸ்ரீஅமிர்தாஸ் மெட்ரிக் பள்ளியில் தேசிய பசுமைப்படை இயக்கம் சார்பாக பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் விழிப்புணர்வு பேரணி 07.09.2018 நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் பிரேம் துவக்கி வைத்தார். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் முன்னிலை வகித்தார். பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் பள்ளி மாணவர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உப்பூர் பேரூந்து நிலையத்தில் மாணவர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பொதுமக்கள், வணிகர்களுக்கு மாணவர்கள் துணிப்பை வழங்கினர். லூயிஸ் லெவல் பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை பள்ளி தாளாளர் அன்புமலர், பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் எஸ். பாண்டியன் செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!