17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் பி.எட் கல்லூரியில் பசுமை படை துவக்க விழா…

இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் பி.எட் கல்லூரியில் பசுமை படை துவக்க விழா…

எழுதியவர்: ஆசிரியர் September 8, 2018, 1:06 pm

இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் தேசிய பசுமைப்படை இயக்கம் தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.பெர்னாடிட் துவக்கிவைக்கப்பட்டுதேசிய பசுமைப்படை இயக்க செயல்பாடுகள் மற்றும் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.

இவ்வியக்கத்தில் கல்வியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் 35 பயிற்சி ஆசிரியர்கள் தேசிய பசுமைப்படை இயக்க உறுப்பினராக இணைத்துக் கொண்டணர். மேலும் அவர்களுக்கு உறுப்பினறுக்கான அடையாளம் வழங்கப்பட்டது. நிலம், நீர், காற்று, மின்ஆற்றல், கழிவு மேலாண்மை என்ற தலைப்பை மையப்படுத்தி, பொறுப்பேற்று தங்கள் பணிகளை சிறப்பாக செய்வதென உறுதி எடுத்தனர்.

தேசிய பசுமைப்படை பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.தீனதயாளன் சுற்றுச்சூழல் கல்வி என்ற தலைப்பில் பேசினார். பயிற்சி ஆசிரியர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வின் நிறைவாக சுற்றுச்சூழல் காப்பது தொடர்பான உறுதிமொழி அனைவரும் ஏற்றனர். நிகழ்ச்சியின்  ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர்.எஸ்.சோமசுந்தரம்  மற்றும் கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!