17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இதம்பாடல் மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிளான போட்டி..

இதம்பாடல் மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிளான போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் September 7, 2018, 2:01 pm

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ள சின்ன இதம்பாடல் ஊரில் உள்ள மகேந்திரன் கல்வி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் கபடி இறகுப்பந்து கூடைப்பந்து கொக்கோ டேபிள் டென்னிஸ் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் ஆண்டிலேயே விளையாட்டு, கலை, ஓவியம், நடனம், இசை என தனித் திறமையை வளர்க்க பயிற்சிகள் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு நடத்தி வருகின்றனர். இதில் மாவட்ட அளவில் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றவர் சாருஸ்ரீ, இரட்டையர் பிரிவில் ரூபி ஷாலினி, ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் கோகுலன் ஆகியோருக்கு பள்ளி தாளாளர் மகேந்திரன் சேர்மன் கோவிந்தன் பள்ளி முதல்வர் செந்தில் முருகன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

செய்தி:- கார்த்தி, கீழக்கரை – கீழை நியூஸ்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!