18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » “BUS BUY”ஆ அல்லது “BUS BAY” வா.. அடிப்படை விசயம் கூட அறியாதவர்களா அரசு அதிகாரிகள்…??

“BUS BUY”ஆ அல்லது “BUS BAY” வா.. அடிப்படை விசயம் கூட அறியாதவர்களா அரசு அதிகாரிகள்…??

எழுதியவர்: ஆசிரியர் September 6, 2018, 5:51 pm

இராமநாதபுரத்தில் முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்காக சாலைகளை மறித்து வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளில் ஆங்கிலத்தில் எழுதி இருக்கும் “BUS BUY” என்ற வாசகம் பெரிய குழுப்பத்தையே உண்டாக்கியது.

இராமநாதபுரத்தில் ஒரு இடத்தில் அல்ல பல இடங்களில் பழைய பேருந்து நிலையம், பாரதி நகர் போன்ற முக்கிய இடங்களில் இது போன்று எழுதி இருந்தது. போக்குவரத்து துறையினர் பேருந்துகளை விற்க போகிறார்களா அல்லது வாங்க போகிறார்களா என்ற எண்ணிக் கொண்டிருக்கும பொழுதுதான் புரிந்தது அது “BUS BUY” அல்ல “BUS BAY” என்று, அதாவது பேருந்துகள் மட்டும் செல்வதற்கு உள்ள பாதை, மற்ற வானங்கள் நுழைய வேண்டாம் என்பதை தொிவிக்கதான் இவ்வாறு எழுதியுள்ளார்கள்.

இப்பாதை வழியாக எத்தனை அரசு அதிகாரிகள், உயர் அதிகாரிகள், படித்த இளைஞர்கள் கடந்து செல்கிறார்கள், ஒருவர் கண்ணிலும் படாமல் இருப்பதுதான் ஆச்சரியம். தமிழ்நாட்டில் அழகிய தமிழ் மொழி மறந்து பிற மொழி கலாச்சரத்தை என்னெவன்றே அறியாமல் புகுக்க நினைப்பதின் விளைவு..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!