17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இமானுவேல் சேகரன் நினைவு நாள்(11/09/2018) அன்று நகருக்குள் வாகனங்களை அனுமதிக்க கோரி மனு..

இமானுவேல் சேகரன் நினைவு நாள்(11/09/2018) அன்று நகருக்குள் வாகனங்களை அனுமதிக்க கோரி மனு..

எழுதியவர்: ஆசிரியர் September 6, 2018, 5:23 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப் 11ல் இமானுவேல் சேகரன நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டில் இருந்து போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

இது சம்பந்தமாக அம்பேத்கர் சட்ட பாதுகாப்பு மைய உறுப்பினர்கள் கூறுகையில், “இந்த மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு, எங்கள் உரிமையை மறுப்பதாகவும், ஏமாற்றம அளிப்பதாகவும் உள்ளது. நடப்பாண்டு எந்த வாகனமும் பரமக்குடி நகருக்குள் வரக்கூடாதென்ற விதி ஏற்புடையதல்ல. வெளி மாவட்ட வாகனங்கள் நகருக்குள் அனுமதியில்லை எனில் வெளிபூர்களில் இருந்து வருவோர் குடிநீர், உணவு கிடைக்காமல் சிரமம் அடைவர். மாற்று பாதை என்பது பாதுகாப்பில்லாதது என்பதால் ஏற்புடையதல்ல. ஒரு வேளை மழை பெய்தால் சாலை மிகவும் மோசமாகி வாகனங்கள் நெரிசல் ஏற்படும்.

எனவே வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை கடந்தாண்டு போல் பரமக்குடி நகருக்குள் அனுமதிக்க வேண்டும். வாகன வழித்தடங்களை மாற்றக் கூடாது. வாகனங்களை கடந்த காலங்களை போல் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நிறுத்த அனுமதிக்க வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் சட்ட பாதுகாப்பு மைய தலைவர் கே வி ஆர் கந்தசாமி, செயலாளர் முத்து கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!