17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » சட்டப்போராளிகள் » கீழக்கரை செய்திகள் » சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுவதை உறுதி செய்ய ‘நீதிபதிகள் குழு’ கீழக்கரையில் ஆய்வு செய்ய வேண்டும் – சட்டப் போராளிகள் கோரிக்கை

சீமை கருவேல மரங்கள் அகற்றப்படுவதை உறுதி செய்ய ‘நீதிபதிகள் குழு’ கீழக்கரையில் ஆய்வு செய்ய வேண்டும் – சட்டப் போராளிகள் கோரிக்கை

எழுதியவர்: keelai February 24, 2017, 4:32 pm

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்ட உயர் நீதி மன்ற நீதிபதிகள், தங்களின் உத்தரவுப்படி கருவேல மரங்கள் முறையாக அகற்றப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள தற்போது கள ஆய்விலும் இறங்கியுள்ளனர். நச்சு தாவரமான சீமைக் கருவேல மரங்களை அடியோடு அகற்றுவதில் உயர் நீதிமன்றம் உறுதியாக உள்ளது. இதனால் உத்தரவிட்டதுடன் இருந்துவிடாமல் கள ஆய்விலும் இறங்கியுள்ளனர்.

விவசாயத்துக்கும், நிலத்தடி நீர்மட்டத்துக்கும், கால்நடைகளுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இந்த சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஏற்கெனவே சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை மேற்பார்வையிட மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஆணையர் கள் நியமிக்கப்பட்டு அவர்களும் தங்கள் பணியை செய்து வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை பகுதிக்கும் நீதிபதிகள் குழு நேரடியாக வந்து கள ஆய்வு மேற்கொண்டு உண்மைத்தன்மையை அறிய வேண்டும் எனவும், கீழக்கரை பகுதியில் இன்னும் கருவேல மரங்களை அகற்றாமல் அலட்சியம் செய்பவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’  பார்க்க வேண்டும் எனவும் கீழக்கரை சட்டப் போராளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!