18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது இலவச மருத்துவ முகாம்..

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து நடத்திய பொது இலவச மருத்துவ முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் September 4, 2018, 7:02 pm

கீழக்கரையில் இன்று 04/09/2018, கீழக்கரை வெங்கடேஸ்வரா கல்யாண மஹாலில் கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் காலை 09.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் டாக்டர். அலாவுதீன் தலைமை வகித்து, நோக்கம் பற்றி விவரித்தார். அதை தொடர்ந்து கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர்  டாக்டர்.சுந்தரம் அனைவரையும் வரவேற்றார். கீழக்கரை வட்டாட்சியர் இராஜேஸ்வரி இம்முகாமை துவக்கி வைத்தார்.

இம்முகாமில் மீனாட்சி மிசன் மருத்துவமனை மருத்துவர் Dr. சங்கரன் மற்றும் Dr.அறிவரசன் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 150கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியை கீழக்கரை ரோட்டரி சங்க செயலாளர் செய்யது முஹம்மது ஹசன், Dr.ராசிக்தீன், பொருளாளர் முனியசங்கர், எபன்,  சித்ரவளலு, தர்மராஜா, நூஹ் அப்துல்காதர், சேக் ஹுசைன் மற்றும் சங்க உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

————//////—————-/////———————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!