17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » துபாய் கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு..

துபாய் கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க கோரி குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு..

எழுதியவர்: ஆசிரியர் September 4, 2018, 4:01 pm

கடந்த செப்டம்பர 1லட்சம் தேதி எல்லை தாண்டி  மீன்பிடிக்கச் எல்லைதாண்டியதாக கூறி ஈரான் கடற்படையினர் கைது செய்து இராமநாதபுர மாவட்ட மீனவர்களை  சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை வட்டம் களிமண்குண்டு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பூமி (26), கீழக்கரை மங்களேஸ்வரி நகர் முனியாண்டி மகன் பால்குமார்(35), திருப்புல்லாணி அருகே வைரவன்கோவில் பஞ்சவர்ணம் மகன் சதீஷ்(23), கல்காடு கிராமம் தங்கராஜ் மகன் துரைமுருகன்(26), செல்லையா மகன் அலெக்ஸ்பாண்டியண் (21), தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தைச் சேர்ந்த ப மில்டன் ஆகியோர் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விரைந்து மீட்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாவட்ட செயலாளர் எம்.கருணாமூர்த்தி வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து எல்லை தாண்டியதாக கூறி ஈரான் கடற்படை கைது செய்த ராமநாதபுரம், தூத்துக்குடி மீனவர்களை மீட்டு தரக்கோரி மீனவர்களின் உறவினர்கள் இராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு கொடுத்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!