17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை தெருக்களை சுத்தமாக வைக்க ஒரு முயற்சி “இது நம்ம தெருங்க”..

கீழக்கரை தெருக்களை சுத்தமாக வைக்க ஒரு முயற்சி “இது நம்ம தெருங்க”..

எழுதியவர்: ஆசிரியர் September 3, 2018, 7:33 pm

கீழக்கரையில் சுகாதார பிரச்சினை என்பது பூதகரமான பிரச்சினையாகவே நீடித்து வருகிறது. இப்பிரச்சனைக்கு நகராட்சியை மட்டும் நம்பி இருக்காமல் கீழக்கரையில் உள்ள சின்னக்கடை தெரு முஸ்லிம் ஊழியர் சங்கம், மேலத்தெரு உஸ்வதுன் ஹஸனா முஸ்லிம் சங்கம், கோகா அஹமது தெரு (முகைதீன் தைக்கா) சங்கம் ஆகியவை இணைந்து நகராட்சி ஒத்துழைப்புடன் தெருக்களை தூய்மைப்படுத்தும் பணி செய்ய உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு தகர் தலைமை காஜி காதர் பக்ஸ் தலைமை வகிக்கிறார். கீழக்கரை நகர மேலாளர் தனலெட்மி வரவேற்புரை வழங்குகிறார். இது சம்பந்தமான விளக்கத்தை கீழக்கரை நகராட்சி ஆய்வாளர் பூபதி வழங்குகிறார். முன்னாள் நகர் மன்ற தலைவர் பசீர் அகமது சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்ச்சி நாளை (04/09/2018) காலை 10.00 மணியளவில் சின்னக்கடை தெரு பகுதியில் தொடங்க உள்ளது.  இந்நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் கூறுகையில், இதை தொடர்ந்து பிற தெருக்களில் உள்ள சங்கங்களுடன் இணைந்து கீழக்கரை முழுவதும் இத்தூய்மை பணி செயல்படுத்தப்படும் என்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!