17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானலில் முன் அறிவிப்பில்லாமல் நெடுஞ்சாலைத்துறையினர் நகராட்சி குழாய் உடைப்பு – வீடியோ செய்தி..

கொடைக்கானலில் முன் அறிவிப்பில்லாமல் நெடுஞ்சாலைத்துறையினர் நகராட்சி குழாய் உடைப்பு – வீடியோ செய்தி..

எழுதியவர்: ஆசிரியர் September 2, 2018, 2:15 pm

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நாயுடுபுரம் வில்பட்டி சாலையில் திடிரென எந்த ஒரு முன் அறிவிப்பில்லாமல் சாலையின் ஓரத்தில் இருந்த நகராட்சியின் குடிநீர் குழாயை நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை தோண்டியதால் அருகில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரண்டு வாரங்களாக தண்ணீர் வராததால் இன்று வழக்கம் போல் தண்ணீர் பிடிக்க காலிகுடங்களுடன் நின்று கொண்டிருந்தனர் தண்ணீர் குழாயில் வராமல் சாலையில் ஓடியதால் இதைகண்ட இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே நாயுடுபுரம் சாலை அருகே சென்று பார்த்தபோது குடிநீர் குழாய் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார் இதனால் நகராட்சி தகவல் கொடுக்க இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் குடிதண்ணீர் கிடைக்காமல் விரக்தியில் உள்ளதாக இருக்கின்றனர்.

இது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் வில்பட்டி சாலையில் கடந்த மூன்று நாட்களாக சாலையை எந்த ஒரு முன் அறிவிப்பில்லாமல் விரிவு படுத்துகிறோம் என்று கூறி நெடுஞ்சாலைத்துறையினர் நகராட்சி குடிநீர் குழாயை உடைத்து சீரழித்து விட்டனர். இதை கொடைக்கானல் நகராட்சியும் கண்டுகொள்ளவே இல்லை இதை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியாளர் தலையிட்டு சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கூறி பொதுமக்களுக்கு ஒரு நல்ல முடிவை தரவேண்டும் என்பது எங்கள் கருத்து என்றார்.

செய்தி கொடைக்கானல்: ரஜினி மற்றும் அஸ்கர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!