18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பழனியில் குண்டும் குழியுமான ரோடு – பொதுமக்கள் அவதி…

பழனியில் குண்டும் குழியுமான ரோடு – பொதுமக்கள் அவதி…

எழுதியவர்: ஆசிரியர் September 1, 2018, 2:04 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் ரோட்டில் குண்டும் குழியுமான ரோட்டால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.

அந்த வழியே செல்லும் பேருந்துகள் மிகவும்  சிரமத்துடனே செல்கிறது. தெருவிளக்குகள் போதுமான அளவில் இல்லாததால் இரவில் டூவீலர்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. மழைக்காலத்தில் மழைநீர் ரோட்டில் தேங்குகிறது. அதனால் கொசு தொல்லையும், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. ரோட்டை சீரமைக்க கோரி பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. உடனே ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

பழனி செய்தியாளர்,  ரியாஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!