18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சுகாதாரம் பேண வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதரமின்றி கிடக்கும் அவலம்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சுகாதாரம் பேண வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம், சுகாதரமின்றி கிடக்கும் அவலம்..

எழுதியவர்: ஆசிரியர் September 1, 2018, 11:03 am

நிலக்கோட்டை பகுதியில் பல வருடங்களாக இயங்கி வந்த ஆரம்ப சுகாதார நிலையம் தற்பொழுது எவ்வித பராமரிப்பும் இன்றி சுவர்கள் இடிந்து புதர்கள் மண்டி போய் செயல்பாடில்லாமல் இருக்கின்றது. இதனால் நிலக்கோட்டையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள்,மற்றும் குழந்தை பெற்றெடுத்த பெண்கள் இவர்களுக்கான மருத்துவ சேவைகளை பெற சுமார் 8 முதல் 10 கி.மீ வரை செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவத் தேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி, குழந்தைகளுக்கான சத்துணவு மருந்துகள், மற்றும் அனைத்து வித மருத்துவ சேவைகளும் பல வருடங்களாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த கட்டிடம் பராமரிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் செவிலியர்கள் தங்க முடியாத சூழ்நிலையில் இருந்து வருகின்றது.

ஆகவே சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த கட்டடத்தின் மீது தனி கவனம் செலுத்தி நிலக்கோட்டை மக்களுக்காக மருத்துவ சேவையை இங்கேயே நடைபெறும்படி வழிவகை செய்ய வேண்டும் என்று நிலக்கோட்டை பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!