18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்தி எதிரொலி உடனடி நடவடிக்கை எடுத்த நகராட்சி..

செய்தி எதிரொலி உடனடி நடவடிக்கை எடுத்த நகராட்சி..

எழுதியவர்: ஆசிரியர் September 1, 2018, 10:07 am

கீழக்கரை சின்னக் கடைத்தெரு பகுதியில் மெயின் ரோட்டில் வாறுகாலின் மேல் 7அடிக்கு மேல் இரவோடு இரவாக விதி மீறி கட்டியதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், கீழை நியூஸ்லும் செய்திகள் வந்தது. இன்று (01/09/2018) நகராட்சியினர் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை இடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இந்த இடத்தோடு நிறுத்தி விடாமல் இதுபோன்று ஆக்கிரமிப்பு உள்ள மற்ற பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன் நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்தினருக்கு பொதுமக்கள் சார்பாக  இப்பிரச்சினையை வெளி கொண்டு வந்த மக்கள் டீம் நகராட்சிக்கு நன்றியை தெரிவித்து கொண்டது.

இதே போல் விதிகளை மீறி தடைகளை ஏற்படுத்தும் மேசன் வேலை செய்யும் கொத்தனார்களை, நகர் கட்டமைப்பிற்கு பங்கம் விளைவித்ததாக போலீசாரிடம் புகார் மனு அளிக்க நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என்றும், இதனால் விதிகளை மீறி வீட்டின் உரிமையாளர் கட்ட சொன்னாலும் அரசு நடவடிக்கை எடுத்தால் சிறை செல்ல நேரிடுமே என பயந்து நேர்வழியில் நடப்பார்கள் என கருதுவதாலும், அடுத்து வரும் நகராட்சி மன்றத்திற்கு பதவியில் அமருபவர்கள் இக்கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு நகரின் கட்டமைப்பை மேன்மையுற பாடுபட வேண்டும் என மக்கள் டீம் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

: தகவல்: மக்கள் டீம் :

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!