17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேலக்கிடாரத்தில் வட்டார இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி..

மேலக்கிடாரத்தில் வட்டார இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் August 31, 2018, 4:13 pm

மத்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேருயுவகேந்திரா மற்றும் மேலக்கிடாரம் அக்னி சிறகுகள் இளைஞர் நற்பனி மன்றம் ஆகியவை இனைந்து சுற்று வட்டார இளையோர் பாரளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.  அக்னி சிறகுகள் இளைஞர் நற்பனி மன்றத்தலைவர் முனைவர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.  தமிழ்நாடு புதுச்சேரி துனை இயக்குனர் நேருயுவகேந்திரா எம்.சடாச்சரவேல் தலைமை தாங்கினார்.  கடலாடி துனை வட்டாட்சியர் ஆர் செந்தில் வேல் முருகன் முன்னிலை வகித்து கனினி பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் மேலக்கிடாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் எம்.இராமச்சந்திரன்  கர்ப்பினி பெண்களுக்கு இந்திரா தனுஷ் தடுப்பூசி போடுவது சம்மந்தமாக பேசினார். பின்னர்  உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு திட்டத்தில் அடடுப்புகளை வழங்கினார். மேலக்கிடாரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி டி.மெர்ச்சி மேரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை சம்மந்தமாக விளக்கினார். கிராம நிர்வாக அலுவலர் பி.மணிகன்டன், ஆசிரியர் டி.ராஷேஸ் மற்றும் இளைஞர்மன்ற தலைவர்கள் அப்துல் ஹாலிக், கார்த்திக்குமார், இளங்கோவன் ஆகியோர் கலந்து கொன்டனர். இறுதியாக நேருயுவ கேந்திரா தேசிய சேவைத் தொன்டர் எஸ்.மூக்கம்மாள் நன்றி கூறினார்.

—————-/////——————//::/—————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!