17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருடர்களுக்கு மரியாதை .. இது ஒரு புது விதம்… திருடிய பைக்கை திருப்பி கொடுத்தால் பணம் தர தயார்..

திருடர்களுக்கு மரியாதை .. இது ஒரு புது விதம்… திருடிய பைக்கை திருப்பி கொடுத்தால் பணம் தர தயார்..

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2018, 3:38 pm

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீ.சிவசங்கரன் சுவாமிகள். இவர் வீட்டு வாசலில் நின்ற டிவிஎஸ் சூப்பர் எக்செல் மோட்டார் பைக்கை 26ம் தேதி முதல் காணவில்லை.

அந்த மோட்டார் சைக்கிளை திருப்பி தருமாறு, திருடர்களுக்கு சிவசங்கரன் துண்டறிக்கை மூலம் வேண்டுகோள் வெளியிட்டுள்ளார். அந்த துண்டறிக்கை இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “என் வீட்டுவாசலில் நின்ற சூப்பர் எக்ஸல் வண்டியை அன்புத் தம்பிகள் பணத்தேவைக்காக எடுத்துச் சென்றுவிட்டார்கள். அந்த வண்டியை எடுத்தவர்கள் என்னிடம் தனிமையில் சந்தித்து உங்களுக்கு வேண்டிய பணத்தை என்னிடம் பெற்றுக் கொள்ளலாம். நான் இதை யாரிடமும் சொல்லமாட்டேன். இது என் தாய் உஜ்ஜயினி மீது ஆணை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதோடு, அவர் செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. மணமேல்குடி மக்கள் தனக்கு பரிசாக கொடுத்த மோட்டார் சைக்கிள் அது என்பதால் இந்த கோரிக்கையைவிடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

பைக்கை எடுத்தவர்கள் அவரிடம் கொடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி:-  oneindia.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!