18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜெனீவா கன்வென்சன் தினம் ஜூனியர் ரெட் கிராஸ் பேரணி…

ஜெனீவா கன்வென்சன் தினம் ஜூனியர் ரெட் கிராஸ் பேரணி…

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2018, 2:27 pm

ஜெனீவா கன்வென்சன் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் அணிவகுத்து நின்ற மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணியை இராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலர் பிரேம் துவக்கி வைத்தார்.

மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஸ்டார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பால் மாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தனபாலன், முத்துராமலிங்கம் (போக்குவரத்து), சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டியன், கல்வி மாவட்ட ஜேஆர்சி கன்வீனர் ரமேஷ், உயர் நிலை, மேல்நிலை பள்ளிகளின் ஜே ஆர் சி இணை கன்வீனர்கள் பாலமுருகன், ஜீவா, நடுநிலைப் பள்ளிகளின் ஜே ஆர் சி இணை கன்வீனர்கள் குணசேகரன், சத்குருகுமார், முத்து பரமேஸ்வரன், பொருளாளர் குழந்தைசாமி மற்றும் 70 பள்ளிகளைச் சேர்ந்த 1,700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம். —————————/———/////—————-
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!