17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாழ்வுக்கு வெளிச்சம் போட வேண்டிய மின் கம்பம்.. உயிர் வாங்கும் நிலையில்.. விழிக்குமா நிலக்கோட்டை மின்சார வாரியம்..?..

வாழ்வுக்கு வெளிச்சம் போட வேண்டிய மின் கம்பம்.. உயிர் வாங்கும் நிலையில்.. விழிக்குமா நிலக்கோட்டை மின்சார வாரியம்..?..

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2018, 12:13 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கரும்பு சாலை தெரு, தெருவின் ஆரம்ப பகுதியில் அமைந்துள்ள மின்சார கம்பம் மிகவும் பழுதடைந்து,  உடைந்த நிலையில் எச்சமயத்திலும் கீழே விழக்கூடிய சூழலில்  தொங்கிக் கொண்டு இருக்கிறது.

இதனால் அக்கம்பத்தில் செல்லும் வயர்கள் ஆபத்தான நிலையில் தொங்கியபடி உள்ளது. அப்பகுதி மக்கள் பல முறை நிலக்கோட்டை மின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு முறையிட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கம்பம் கீழே விழுந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் முன்பு அதை சரி செய்ய வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல். ———————————-//——————————-
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!