17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிகாரிகளுக்கு 50 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட ‘குட்கா டைரி’..குட்கா நிறுவன அதிபரிடம் விசாரணை தீவிரம்…

அதிகாரிகளுக்கு 50 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட ‘குட்கா டைரி’..குட்கா நிறுவன அதிபரிடம் விசாரணை தீவிரம்…

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2018, 9:10 am

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக குட்கா நிறுவன அதிபர் மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம் பெற்றுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பான் மசாலா மற்றும் குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும் குட்கா பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் மாதவ ராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட டைரியில் அமைச்சர்கள் முதல் உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் வரை பலருக்கும் சுமார் 50 கோடிக்கும் மேல் லஞ்சம் வழங்கப்பட்ட விபரங்களுடன் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டது.

தமிழகத்தில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையி்ல் இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல் – கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி)

-————————//////////————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!