17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரட்டை மடி மீன்பிடியை தடுக்க. மீன்வளத் துறை அதிகாரியிடம் மண்டபம் மீனவர்கள் மனு…

இரட்டை மடி மீன்பிடியை தடுக்க. மீன்வளத் துறை அதிகாரியிடம் மண்டபம் மீனவர்கள் மனு…

எழுதியவர்: ஆசிரியர் August 29, 2018, 7:58 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடலில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி மீன்பிடி கடந்த சில வாரங்களாக மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து மீனவ சங்கப் பிரதிநிதிகள் மின் வளத் துறை அலுவலகத்தில் பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை. மீன்வளம் பாதிப்பால் நடுத்தர மீன்பிடி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் விசைப்படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் இரட்டை மடி மீன்பிடி தொழிலுக்கு உடந்தையாக செயல்படும் மீன்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என மண்டபம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க செயலாளர் பெரி. பாலசுப்ரமணியன், இணை செயலாளர் ஜாஹிர் உசேன், உதவி தலைவர் செய்யது சுல்தான், பொருளாளர் அடைக்கலம், செயற்குழு உறுப்பினர்கள் தாசன், செல்வக்குமார் ஆகியோர் மீன்வளத் துறை உதவி இயக்குநரிடம் மனு கொடுத்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

———————————————————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!