17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு..

கீழக்கரை இந்தியன் வங்கி வாடிக்கையாளர் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 29, 2018, 5:23 pm

கீழக்கரை இந்தியன் வங்கி கிளை சார்பாக இன்று (29/08/2018) வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.  இந்நிகழ்வில் பேசிய வங்கி மேலாளர் கோபிநாத், “இந்த சந்திப்பின் நோக்கம் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்ளவும், எங்களுடைய சேவையை மேம்படுத்துவதுமாகும்” என்றார்.

அதைத் தொடர்ந்து மேலாளர் இந்தியன் வங்கி மூலம் வழங்கப்படும் பல தரப்பட்ட சேவைகள், விழாக்கால சலுகையாக வழங்கப்பட இருக்கும் கடன் திட்டங்கள் ஆகியவற்றை பற்றி வாடிக்கையாளர்கள் மத்தியில் விளக்கி கூறினார்.

கீழக்கரையில் வாடிக்கையாளர்களை துச்சமாக நினைக்கும் பழமையான  வங்கிகளுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிய முற்படும் இந்தியன் வங்கியின் செயல் பாராட்டுக்குரியதே.

————————————————————————

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!