18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக இராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பிளாஸ்டிக் அகற்றம்..

நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக இராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பிளாஸ்டிக் அகற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2018, 1:41 pm

இராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும் பாலித்தின், பிளாஸ்டிக் குப்பை பல மாதங்களாக குவிந்து கிடந்தது. மேலும் இங்குள்ள ஓட்டல்களில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு நீர் தேங்கியதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவியது.

இதனால் இது வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்த நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பிளாஸ்டிக் பாலிதீன் பைகளை அகற்றும் களப்பணி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலர் பத்மநாபன், பொருளாளர் காயாம்பு, ராமநாதபுரம் நகர் செயலர் மணி வண்ணன், கலை இலக்கிய பிரிவு பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் களப்பணியில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீங்குகள் குறித்து வாரம் ஒரு முறை பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தி- முருகன்- கீழைநியூஸ், இராமநாதபுரம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!