17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஈரோடு மற்றும் இராமநாதபுரத்தில்  விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்..

ஈரோடு மற்றும் இராமநாதபுரத்தில்  விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் August 26, 2018, 6:42 pm

இராமநாதபுரத்தில்  நீதிமன்ற உத்தரவின் பேரில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பின் இருக்கையில் பயணிப்பவரும், இருவருமே தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி இராமநாதபுரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கினார். அருகில் இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் உள்ளார்.

அதே போல் ஈரோட்டில் ஹெல்மட் விழிப்புணர்வு இருசக்கர வாகனப்பேரணி ஈரோடு டவுண் பகுதியில் ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

பேரணியில் ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 65 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனப்பேரணி இன்று நடைபெற்றது.

இருசக்கர வாகன ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி TR.S.சக்தி கணேசன் (SP.ERODE), மற்றும் சேகர் (TR.DSP.ERODE) அவர்களால் கொடியசைத்து துவக்கப்பட்டு சிறப்பாக இன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இருசக்கர வாகன ஹெல்மட் விழிப்புணர்வு பேரணி பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தகவல்.

முருகன், இராமநாதபுரம் அபுபக்கர்சித்திக்

தொகுப்பு அ.சா.அலாவுதீன் மூத்த நிருபர் கீழை நியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!